கள்வன்

புகைக்கு நடுவே கைப்பிடித்தவன்
பதற்றத்தை தணிக்க கை தந்தவன்!
இமைகளுக்கு இடையே படம் எடுத்தவன்
மனதிற்குள்ளே இடம் கொடுத்தவன்!
துன்பத்திலே துவளாமல் எழச் சொன்னவன்
இன்பத்திலே தினந்தோறும் விழச் செய்தவன்!
சுதந்திரத்தை உணர வைத்த நண்பனவன்
கனவுகளுக்கு வானமே இல்லை என்று உணர்த்தியவன்!
சிறு சிறு சீண்டல்களால் காதலித்தவன்
சின்ன சின்ன மோதல்களால் காதலிக்க வைத்தவன்!
உள்ளத்தைப் படித்து சுமைகளைத் தகர்த்தவன்
கள்ளம் கொண்டு இதயத்தைக் கொய்தவன்!
தொலைந்த இதயத்தை சிரமப்பட்டு மீட்டு வர
அரவமில்லாமல் மீண்டும் திருடிய கள்வனவன்
என் அன்பான கணவன்!

Create a website or blog at WordPress.com

Up ↑