IKE அத்தியாயம் – 1

ஹலோ நட்புக்களே,

இதழில் கதையெழுது கதையின் முதல் அத்தியாயம் கீழே உள்ள லிங்கில் உள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அடுத்த பதிவு புதன்கிழமை.

ரொம்ப நாள் கழிச்சு ஆன்லைனில் எழுதுவது என்னமோ பரீட்சைக்குப் போற மாதிரியே இருக்கு… :p

நன்றி,
லாவண்யா

இதழில் கதையெழுது…

அனைவருக்கும் வணக்கம்!

நான் இதுவரையில் மூன்று கதைகளை இணையதளத்தில் எழுதினேன். அதனால் ஏற்படும் சங்கடங்களைப் பற்றிப் பெரும்பாலானோர் அறிவர். ஆகவே சில வருடங்கள் நேரடியாகப் புத்தகமாகவே வெளியிட்டு வந்தேன்.

வாசகர்களின் விருப்பம் அறிந்து மீண்டும் இணையதளத்தில் எழுத வந்திருக்கிறேன். எப்போதும் போல் உங்களை ஆதரவை எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முடிந்த வரையில் உங்கள் கருத்துகளுக்கு பதிலளிக்க முயல்கிறேன். ஆனால் நேரம் பற்றாக்குறையினால் அப்படி என்னால் உங்கள் கருத்துக்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லை என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள் என இப்பொழுதே கேட்டுக் கொள்கிறேன்.

வார நாட்களில் மூன்று அத்தியாயங்களைப் பதிவு செய்வேன். உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
லாவண்யா.

தேர்வு

உறவுகள் (மே 2014) நாவலிலிருந்து…

இரவெல்லாம் கண்விழித்து
படித்ததை நினைவில் வைத்து
‘படித்தது மட்டுமே வரவேண்டும்’,
எனும் மந்திரத்தை உதடுகள் உச்சரித்து
தேர்வெழுதச் செல்லும் அதிகாலை நேரம்!

வினாத்தாளைத் தொடாமல் கண்கள் வெறிக்க,
விடைத்தாளைப் பட்டும் படாமல் பேனா முத்தமிட
மூளையோ விடாமல் சண்டித்தனம் செய்ய
தேர்வெழுதும் படபடப்பான நேரம்!

மேலும் படிக்க…

தாய்மை

அன்பென்ற மொழியிலே (ஏப்ரல் 2013) நாவலிலிருந்து…

அகம் மயங்கிய
தருணத்தில் உருவானாய்!
என்னை சரி பாதியாய் கொண்டு
என்னில் கருவானாய்!
பெருகி வளர்ந்து,
கவலைகள் அனைத்தையும்
அண்டவிடாமல் அகற்றினாய்!
அசைந்து, உருண்டு
மனம் நிறைய பரவசத்தை
தடையில்லாமல் புகட்டினாய்!
உதைத்து, விளையாடி,
தெவிட்டாத இன்பத்தை
அளவில்லாமல் ஊட்டினாய்!
சுகமான வலி கொண்டு
இதமான விழி நீர் திரண்டு
என் தாய்மைக்கு வழி வகுத்தாய்!
கண்களில் வெள்ளம் புரள
நெஞ்சம் மொத்தமாய் கரைய
என் பெண்மையை ஒளிர வைத்தாய்”
என் பெண்மைக்கு மெ(மே)ன்மை சேர்த்தாய்!

பயணம்

தந்தையின் கைப்பிடித்து
அன்னையின் மடி சாய்ந்து
அண்ணனிடம் சண்டையிட்டு
ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து
சென்ற பயணம், தித்திக்கும் பயணம்!

தந்தை இறங்கித் தண்ணீர் வாங்கச் செல்ல
ஓட்டுனர் வண்டியை கிளப்ப முயல
அச்சசத்தில் என் சுற்றுப்புறம் மறக்க,
என் தந்தை வண்டியில் ஏறியதை உணராமல்,
‘ஐயையோ வண்டியை எடுக்காதீங்க
என் அப்பா இன்னும் வரலை’
என்று நான் வீரிட்டு அலறியது,
அண்ணன் அவமானப்பட்டு முறைத்தது,
என் நினைவுகளில் படங்களாய் விரிகிறது
இன்றும் பசுமையாய்!

கள்வன்

புகைக்கு நடுவே கைப்பிடித்தவன்
பதற்றத்தை தணிக்க கை தந்தவன்!
இமைகளுக்கு இடையே படம் எடுத்தவன்
மனதிற்குள்ளே இடம் கொடுத்தவன்!
துன்பத்திலே துவளாமல் எழச் சொன்னவன்
இன்பத்திலே தினந்தோறும் விழச் செய்தவன்!
சுதந்திரத்தை உணர வைத்த நண்பனவன்
கனவுகளுக்கு வானமே இல்லை என்று உணர்த்தியவன்!
சிறு சிறு சீண்டல்களால் காதலித்தவன்
சின்ன சின்ன மோதல்களால் காதலிக்க வைத்தவன்!
உள்ளத்தைப் படித்து சுமைகளைத் தகர்த்தவன்
கள்ளம் கொண்டு இதயத்தைக் கொய்தவன்!
தொலைந்த இதயத்தை சிரமப்பட்டு மீட்டு வர
அரவமில்லாமல் மீண்டும் திருடிய கள்வனவன்
என் அன்பான கணவன்!

முதல் பிரிவு

என் அன்னையை,
பிரிய நேர்ந்த முதல் நாள்!
பள்ளிக்கூடத்தில்,
நான் சேர்ந்த அந்த நாள்!
*நான் அழுது புரண்டது
என் ஆசிரியர் மிரட்டியது
தோழர்-தோழியர் தேற்றியது
எதுவும் நினைவிலில்லை.
*பிரிவைத் தாளாமல் கண்களில் நீர் படர
தனித்து விட முடியாமல் மனம் பதற
எந்தன் நன்மையே கருத்தில் மேலோங்க
விலகும் என் தாயின் முகம்
இன்றும் நினைவிலிருக்கிறது!

முதல் வேலை

பனி படர்ந்த காலை வேளையில் கானம் பாடி
கண்களில் மகிழ்ச்சி கலந்த பய ரேகை சூடி,
நெஞ்சினில் பந்தய குதிரையின் வேகம் கூடி
பரவசத்துடன் கூடிய அவசரத்துடன் ஓடி
என் இருக்கையை ஆர்வத்துடன் நாடி
பணி செய்யும் என் முதல் வேலை
நிம்மதி கூடிய இன்பத்தை தருவிக்கும் வேலை(ளை)

மனித உணர்வுகள்… உணருங்கள்…

மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து…

மனித உணர்வுகள் என்றுமே அழகானவை!! அற்புதமானவை!! ஆழ் மனதில் கடைந்து நெய்யப்பட்டவை… ஒருவருக்கொருவர் மாறுபட்டவை!

மனித மனதில் மலரும் இயல்பான உணர்வுகளை வெட்டிச் சாய்க்கவோ, சுட்டுப் பொசுக்கவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இயற்கைப் பற்றி மனிதன் அறிந்த விஷயங்கள் மிகவும் சொற்பமானவை.
மேலும் படிக்க…

Create a website or blog at WordPress.com

Up ↑