அன்பென்ற மொழியிலே (ஏப்ரல் 2013) நாவலிலிருந்து…
அகம் மயங்கிய
தருணத்தில் உருவானாய்!
என்னை சரி பாதியாய் கொண்டு
என்னில் கருவானாய்!
பெருகி வளர்ந்து,
கவலைகள் அனைத்தையும்
அண்டவிடாமல் அகற்றினாய்!
அசைந்து, உருண்டு
மனம் நிறைய பரவசத்தை
தடையில்லாமல் புகட்டினாய்!
உதைத்து, விளையாடி,
தெவிட்டாத இன்பத்தை
அளவில்லாமல் ஊட்டினாய்!
சுகமான வலி கொண்டு
இதமான விழி நீர் திரண்டு
என் தாய்மைக்கு வழி வகுத்தாய்!
கண்களில் வெள்ளம் புரள
நெஞ்சம் மொத்தமாய் கரைய
என் பெண்மையை ஒளிர வைத்தாய்”
என் பெண்மைக்கு மெ(மே)ன்மை சேர்த்தாய்!