Author: லாவண்யா சீலன்

காதலின் சாரலிலே…

கதையுலகில் என எழுத்தின் முதல் பயணம் இந்தக் கதையிலிருந்து தான் ஆரம்பித்தது. எப்போதுமே என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி. பத்து நாட்களுக்கு லிங்க் இங்கே இருக்கும். அன்புடன், லாவண்யா.

மூடுபனி நெஞ்சம்.

அனைவருக்கும் வணக்கம்! இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன். படிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்….

இதழில் கதையெழுது…

அனைவருக்கும் வணக்கம்! நான் இதுவரையில் மூன்று கதைகளை இணையதளத்தில் எழுதினேன். அதனால் ஏற்படும் சங்கடங்களைப் பற்றிப் பெரும்பாலானோர் அறிவர். ஆகவே சில வருடங்கள் நேரடியாகப் புத்தகமாகவே வெளியிட்டு வந்தேன். வாசகர்களின் விருப்பம் அறிந்து மீண்டும் இணையதளத்தில் எழுத வந்திருக்கிறேன். எப்போதும் போல்…

தேர்வு

உறவுகள் (மே 2014) நாவலிலிருந்து… இரவெல்லாம் கண்விழித்து படித்ததை நினைவில் வைத்து ‘படித்தது மட்டுமே வரவேண்டும்’, எனும் மந்திரத்தை உதடுகள் உச்சரித்து தேர்வெழுதச் செல்லும் அதிகாலை நேரம்! வினாத்தாளைத் தொடாமல் கண்கள் வெறிக்க, விடைத்தாளைப் பட்டும் படாமல் பேனா முத்தமிட மூளையோ…

தாய்மை

அன்பென்ற மொழியிலே (ஏப்ரல் 2013) நாவலிலிருந்து… அகம் மயங்கிய தருணத்தில் உருவானாய்! என்னை சரி பாதியாய் கொண்டு என்னில் கருவானாய்! பெருகி வளர்ந்து, கவலைகள் அனைத்தையும் அண்டவிடாமல் அகற்றினாய்! அசைந்து, உருண்டு மனம் நிறைய பரவசத்தை தடையில்லாமல் புகட்டினாய்! உதைத்து, விளையாடி,…

பயணம்

தந்தையின் கைப்பிடித்து அன்னையின் மடி சாய்ந்து அண்ணனிடம் சண்டையிட்டு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து சென்ற பயணம், தித்திக்கும் பயணம்! தந்தை இறங்கித் தண்ணீர் வாங்கச் செல்ல ஓட்டுனர் வண்டியை கிளப்ப முயல அச்சசத்தில் என் சுற்றுப்புறம் மறக்க, என் தந்தை…

கள்வன்

புகைக்கு நடுவே கைப்பிடித்தவன் பதற்றத்தை தணிக்க கை தந்தவன்! இமைகளுக்கு இடையே படம் எடுத்தவன் மனதிற்குள்ளே இடம் கொடுத்தவன்! துன்பத்திலே துவளாமல் எழச் சொன்னவன் இன்பத்திலே தினந்தோறும் விழச் செய்தவன்! சுதந்திரத்தை உணர வைத்த நண்பனவன் கனவுகளுக்கு வானமே இல்லை என்று…

முதல் பிரிவு

என் அன்னையை, பிரிய நேர்ந்த முதல் நாள்! பள்ளிக்கூடத்தில், நான் சேர்ந்த அந்த நாள்! *நான் அழுது புரண்டது என் ஆசிரியர் மிரட்டியது தோழர்-தோழியர் தேற்றியது எதுவும் நினைவிலில்லை. *பிரிவைத் தாளாமல் கண்களில் நீர் படர தனித்து விட முடியாமல் மனம்…

முதல் வேலை

பனி படர்ந்த காலை வேளையில் கானம் பாடி கண்களில் மகிழ்ச்சி கலந்த பய ரேகை சூடி, நெஞ்சினில் பந்தய குதிரையின் வேகம் கூடி பரவசத்துடன் கூடிய அவசரத்துடன் ஓடி என் இருக்கையை ஆர்வத்துடன் நாடி பணி செய்யும் என் முதல் வேலை…

மனித உணர்வுகள்… உணருங்கள்…

மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து… மனித உணர்வுகள் என்றுமே அழகானவை!! அற்புதமானவை!! ஆழ் மனதில் கடைந்து நெய்யப்பட்டவை… ஒருவருக்கொருவர் மாறுபட்டவை! மனித மனதில் மலரும் இயல்பான உணர்வுகளை வெட்டிச் சாய்க்கவோ, சுட்டுப் பொசுக்கவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது?…