மூடுபனி நெஞ்சம் (அக்டோபர் 2015) நாவலில் இருந்து… விண்ணில் தொடங்கி என் மூச்சுக்குழலில் இறங்கினாயோ நெஞ்சமதில் வாசம் கொண்டாயோ! விட்டு, விட்டு விழுகிறதே பட்டு, பட்டுத் தெறிக்கிறதே உன்னை விடாமல் தொட்டுவிட நெஞ்சமது துடிக்கிறதே! கண்ணோடு மணியாக நெஞ்சோடு உன் வாசம்…
பெண்ணின் தேடல்…
உறவுகள் (மே 2014) நாவலில் இருந்து… ஓர் பெண் மழலையாய்ப் பிறந்து, மனைவியாக பரிணாமம் கொண்டு, தாயாகப் பயணிக்கின்றாள். அவளின் வாழ்க்கைப் பயணம் நிறைவாக முடிகின்றதா, அல்லது ஒருவிதத் தேடலுடன் தொடங்கி தொடர்கின்றதா? சிந்தியுங்கள்! அடிமனதின் ஆசைகள் அனைத்தும் என்றாவது ஓர்…
விடுமுறை
மின்மினிக் கனவுகள் (மார்ச் 2017) நாவலில் இருந்து… தங்கையாய், தம்பியாய் என் வானில் பறந்த சித்தியின் பிள்ளைகளைக் காணச் செல்லும் பள்ளி விடுமுறை! களைப்பில் இரவு பெரியவர்கள் உறங்க களிப்பில் சிறியவர்கள் கத்தி முழங்க என்ன பேசினோம் என்றே தெரியாமல் கதைத்து…
ஏ(மா)ற்றமா?
Chillzee.in 2017 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது…. வேலைமுடித்து வீடு வந்த பாலகுமாருக்கு மனம் எதிலும் ஒன்றவில்லை. எல்லாம் சற்றுமுன்னர் நண்பனிடமிருந்து வந்த அழைப்பால். “பாலா, எப்படிக் கேட்கிறது எனத் தெரியலை. வந்து… ஓர் முக்கியமான விஷயம் கேட்கணும்… வீட்டில் இருக்கியா?” என…
உயிர்த்துளி உன்னில் சங்கமம்
Chillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது… ஜனனியை வேறொரு இளைஞனுடன் கண்டதும் நந்தகுமாரின் மனம் வேண்டாத எண்ணங்கள் அனைத்தைச் சுற்றியும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. கெட்ட எண்ணங்களின் ஆதிக்கம் கூடக் , கூட மதியின் பகுத்தறியும் திறன் வலுவிழந்து கொண்டிருந்தது. அதன் பலனாக…
முதல் காதல்
Chillzee.in 2016 சிறுகதைப் போட்டிக்காக எழுதியது.. மாலை வேளைக் காற்று சிலுசிலுவென்று அடித்துக் கொண்டிருக்க, முருங்கை மர இலைகள் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன. அந்த மரத்திற்கு அடியில் நாற்காலியைப் போட்டு, கண் இமைகளை மூடி, மலரும் நினைவுகளுக்குள் மலர்ந்து கொண்டிருந்தார்…
ஒப்பீடு
ஆகஸ்ட் 2014 – ஓம் சக்தி நாளிதழில் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது என் பெயர் சுதாகர். நான் வருமான வரித்துறையில் வேலையில் இருக்கிறேன். இன்று மைதிலியைப் பெண் பார்க்க என் இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், தம்பி மற்றும்…
மாத்தியோசி…
ஆகஸ்ட் 2013 – ஓம் சக்தி நாளிதழில் பி. லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் வெளியானது. “வர வர உங்க அப்பாக்கு என்னாச்சுன்னே தெரியலை. எதையுமே ஒழுங்கா செய்யமாட்டேங்கிறார்…” சமயலறையில் இருந்த அம்மா என் காதில் கிசுகிசுத்தார். “அப்பா அப்படி என்ன…
மறுபக்கம்
வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்சனையைப் பற்றிய சிந்தனையில் தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது. இருபது வீடுகள் அடங்கிய எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளர் நான் தான்.
அதனால் இந்தப் பிரச்சனையை நான் தான் பேசிக் கையாள வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டனர். அதனால் தப்பிக்க முடியாது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன் என்று மலைப்பாக இருந்தது.